தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கயேந்திரனுக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயலாளர் கயேந்திரனும் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. அதே நேரம் கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவது தொடர்பில் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலம் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் தற்போது அதனை கயேந்திரனுக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கயேந்திரகுமார் மற்றும் கயேந்திரன் ஆகியொர் மீண்டும் பாராளுமன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment