தமிழரசுக் கட்சியின் தலைமையை பெற வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. தலைமையில் இருக்கிற ஒருவரை வீழத்தியோ அல்லது பறித்துக் கொண்டே அந்தப் பதவியை எடுக்க வேண்டுமென்ற சிந்தனையும் எனக்கில்லை. ஆனால் அனைவரும் ஒருமித்து வழங்கினால் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிவடைந்திருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைமை உட்பட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கும் தோல்வி ஏற்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் தமிழரசுக் கட்சியின் தலை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை நடாத்திய சிறிதரனிடம் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பீர்களா என ஊடகவியியலாளர்களால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது..
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு எனக்கு தனிப்பட்ட ஆசை எதுவும் கிடையாது. பதவியில் இருக்கின்ற ஒருவரை தூக்கி எறிந்துவிட்டோ அல்லது அவரிடமிருந்து அந்தப் பதவியை பறித்துக் கொள்ள வேண்டுமெனர்றோ நான் சிந்திக்கவில்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருமித்து அந்தப் பதவியை அனைவருமாக எனக்குத் தந்தால் அதனை ஏற்பதற்கு நான் தயாராகவே இருக்கிறென். மேலும் தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதும் அவசியம்.
ஆனால் தோல்தல் தோல்விகளுக்காக தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றில்லை. அதனூடாக பதவி எனக்கு கிடைக்க வேண்டுமென்றும் இல்லை.
ஆக நானாக பதவியை பறிக்கவோ தூக்கியெறியவோ மாட்டேன். அனைவரும் அதனை ஒருமித்து தந்தால் அதனை ஏற்றுக் கொள்வேன் என்றார்.
Post a Comment