எஸ்.பி.பி உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை.. - Yarl Voice எஸ்.பி.பி உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை.. - Yarl Voice

எஸ்.பி.பி உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை குழுவினருடன் இந்திய மற்றும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்கள் இணைந்து எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி. உடல் நலம் பெற திரை உலகினர்இ ரசிகர்கள்இ அரசியல் பிரமுகர்கள் பலரும் இன்று கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post