டோனியின் ஓய்வு அறிவிப்பு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice டோனியின் ஓய்வு அறிவிப்பு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice

டோனியின் ஓய்வு அறிவிப்பு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டோனியின் இந்த முடிவு குறித்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர். சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் டோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கேப்டன் விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும்.

2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை டோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே டோனியை சுருக்கிவிட முடியாது பல கோடி இளைஞர்களுக்கு டோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் டோனி.

சக வீரர்கள் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தபோது டோனி தனது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது என கூறி உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post