அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி - Yarl Voice அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி - Yarl Voice

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி


20ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிலுள்ள சில பிரிவுகள் தொடர்பில் இணங்கமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய எதிர்கட்சிப் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைக் கூறினார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர்இ 19ஆவது திருத்தத்தின் முக்கியமான விடயங்களாவன அரசியலமைப்புச் சபைக்கான அதிகாரங்களாகும். சுயாதீனமான அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் அரசமைப்புச் சபைக்கு வழங்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் இருந்திருந்தால் நீதிமன்றத்தினால் அவருக்கெதிராக வழக்கு தீர்ப்பு அளித்திருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளைஇ ஜே.வி.பியின் ஊடக சந்திப்பும் கொழும்பில் இன்று நடந்தது.
இதில் பேசிய அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கஇ 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கெதிரான சர்வதிகாரப் போக்கை அரசாங்கம் கடைபிடிக்க தயாராகிறது என்று எதிர்ப்பு வெளியிட்டார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post