தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபயணம் - Yarl Voice தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபயணம் - Yarl Voice

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபயணம்



தாயக விடியலுக்காக தன்னுயிர் தந்து தரணிவாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு  தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணத்தை தாயக இளையோர் சமூகத்தினர் முன்னெடுக்கவுள்ளனர். 

இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21 ஆம் திகதி 
ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் நினைவஞ்சலியுடன் நிறைவடையவுள்ளது. 

எனவே இந்த புனிதமான எழுச்சி நடைபயணத்தில் தாயகத்திலுள்ள  அனைவரும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு தருவதுடன் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு அஞ்சலியிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நடைபயணத்துக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு  தமிழ் தேசிய கட்சிகளின் இளையோர்  அணியினர் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post