20 ஆவது திருத்தம் மக்களுக்கு பேராபத்து - தோற்கடிக்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் - Yarl Voice 20 ஆவது திருத்தம் மக்களுக்கு பேராபத்து - தோற்கடிக்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் - Yarl Voice

20 ஆவது திருத்தம் மக்களுக்கு பேராபத்து - தோற்கடிக்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன்



20 ஆவது திருத்தம் சர்வாதிகார நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்த திருத்தத்தை கூடு;டமைப்பு எதிர்ப்பதுடன் அதனைத் தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்குமென்றும் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் சுதுமலை சாவல்காட்டு வேம்படி வைரவர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலயத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராக கலந்த கொண்டு அடிக்கல்லை சித்தார்த்தன் நாட்டி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதாவது 20 ஆவது திருத்திம் மிகவும் ஒரு சர்வாதிகார ரீதியில் ஐனாதிபதியைக் கொண்டு போகக் கூடிய நிலைமையை உருவாக்க இருக்கின்றது. 19 ஆவது திருத்தத்தில் உள்ள நல்ல அம்சங்கள் அதாவது ஐனநாயக அம்சங்கள் எல்லாம் மறுதலிக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட இருக்கின்றது. 

முக்கியமாக 19 ஆவதிலே இருந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் இல்லாமல் செய்யப்பட்டு குறிப்பாக பொலிஸ் ஆணையகம் தேர்தல் ஆணையகம் என இவைகள் எல்லாம் இல்லாமல் செய்யப்பட்டு ஐனாதிபதியின் கீழ் அதிகாரங்கள் கொண்டு வரப்படுகின்றது. இது ஒரு தனிமனிதரை மீண்டும் சர்வாதிகார நிலைமைக்கு கொண்டு செல்லும்.

ஆகவே நாங்கள் அதனை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாங்கள் அதனை முற்று முழுதாக எதிர்ப்போம். அதற்கு எதிராகவே கூட்டமைப்பினது செயற்பாடுகள் அமையும். ஆகையினால் இந்த 20 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான முழுமையான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்றார்;.

0/Post a Comment/Comments

Previous Post Next Post