கூட்டமைப்பை அழிக்க நாங்கள் விடமாட்டோம் - பலப்படுத்கின்ற வேலையை செய்வோம் - ரெலோ அறிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பை அழிக்க நாங்கள் விடமாட்டோம் - பலப்படுத்கின்ற வேலையை செய்வோம் - ரெலோ அறிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பை அழிக்க நாங்கள் விடமாட்டோம் - பலப்படுத்கின்ற வேலையை செய்வோம் - ரெலோ அறிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாரும் அழிக்க விடமாட்டோம். மாறாக கூட்டமைப்பை பலப்படுத்துகின்ற வேலைகளையே கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ செய்யுமென அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்த கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளத. ஆதற்காண காரணங்கள் எல்லொருக்கும் தெரியும். ஆகவே பின்னடைவிற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய சிலர் குழக்களை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பின்னடைவுக்கான காரணங்கள் தெரிந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கூட்டமைப்பில் இருந்த கொண்டு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஏற்கவில்லை. விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. விடுதலைப் போராட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களை சிலர் கூறி வந்திருக்கின்றனர். அது மாத்திரமல்லாமல் இன்று தீர்வு நாளை தீர:வு என்று மக்களை ஏமாற்றியும் வந்திருக்கின்றனர்.

ஆகவே இந்த விடயங்களே பின்னடைவிற்கு காரணங்களாக இருக்கின்ற போது இந்த தவறுகளை ஏற்றுக் கொண்டு அதனை தீரத்தி நடக்க வேண்டியது அவசியமானது.  அதனூடாகவே கூட்டமைப்பை பலமான சக்தியாக கொண்டு செல்ல முடியும். ஆவ்வாறு கூட்டமைப்பை பலமான கொண்ட செல்வதற்குரிய பாரிய பொறுப்பு ரெலோவிற்கு இருக்கிறது. 

கூடு;டமைப்பின் ஆரம்பம் முதல் இன்றுவரை அதில் இருக்கின்ற ஒரு தரப்பாக எங்களது கட்சியெ இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பை நாங்கள் பலப்படுத்திச் செயற்படுவோமே தவிர அதனை உடைக்க ஒரு காரணகர்த்தாக்களாக நாங்கள் இருக்க மாட்டோம். இன்று வரைக்கும் கூட்டமைப்பு உடையாமல் பாதுகாக்கின்ற கட்சியாக ரெலோவே இரக்கின்றது.

எமது கட்சியான ரெலோ எங்கு இருக்கிறதோ அங்கு தான் கூட்டமைப்பும் இருக்குமு;. ஆக நாம் தொடர்ந்தும் இருக்கின்ற கூட்டமைப்பை பாதுகாத்துக் கொண்ட கடந்த காலங்கள் போல் மிகப் பெரிய பலமான ஒரு தரப்பாக கூட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post