கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியை மோதிய சொகுசுகார் - Yarl Voice கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியை மோதிய சொகுசுகார் - Yarl Voice

கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியை மோதிய சொகுசுகார்


நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது சொகுசு கார் மோதி விபத்து!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் (05.09.2020) இன்று இரவு 9.00 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது அதே வழியாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் காரை செலுத்தி வந்த சாரதிக்கு எந்தவித காயமும் இல்லாம் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

விபத்தின்போது சுமார் 30 நிமிடங்கள் வாகன நெரிசல்  காணப்பட்டமை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

விபத்துக்குள்ளான காரை செலுத்த வந்த சாரதி கிளிநொச்சி பளை பொலிஸ் போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post