ஒற்றுமையாகவே நாம் நிற்கின்றோம் - சுமந்திரனின் நிகழ்வில் மாவை சேனாதிராசா - Yarl Voice ஒற்றுமையாகவே நாம் நிற்கின்றோம் - சுமந்திரனின் நிகழ்வில் மாவை சேனாதிராசா - Yarl Voice

ஒற்றுமையாகவே நாம் நிற்கின்றோம் - சுமந்திரனின் நிகழ்வில் மாவை சேனாதிராசா



இந்த நாட்டில் ஏற்படுத்தவுள்ள சர்வாதிகார முறைகளை எதிர்க்க 
எங்கள் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் இதனைவிட எமது கட்சிக்குள் அதாவது தமிழ் அரசுக் கட்சிக்குள் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் எழுந்த விமர்சணங்களை தூக்கி வைத்துவிட்டு இனத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு தீவிரமாக செயல்பட வேண்டும். அதனை நாம் செய்வோம் என்பதன் அறிகுறியாகவே நான் இங்கே வந்து இந்தக் கருத்தை முன் வைக்கின்றேன். என தமிழ் அரசுக் கட்ணியின் தலைவர் மாவை சேனாதிராயா தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்த மக்களிற்கு நன்றி தெரிவித்து நேற்றைய தினம் சிறுப்பிட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மேலும் உரையாற்றுகையில்.

பல தடவைகள் வீழ்ந்து விட்டேன் என்றபோதும் ஏன் கொல்லப்பட்டு விட்டேன் என்றும் பல காலங்களை சழ்தித்திருக்கின்றேன். அவ்வாறான காலங்கள் எல்லாத்தையும் மீறி எழுந்து வந்தபோது வீந்த்தப்பட்டான் எனவும் கொல்லப்பட்டார் எனக் கூறிய நேரத்திலும் முன்னரைவிட மிகப் பலமாகவே மக்கள் மத்தில் எழுந்து வந்து மக்களின் விடிவிற்காக எண்ணை அர்ப்பனித்தேன்.

உலகிலே பெருந் தலைவர்கள் தோல்வி கண்டிருக்கின்றார்கள் , ஆட்சியை இழந்திருக்கின்றார்கள் அவர்கள் வரலாற்றில் மீண்டும் பெரு வெற்றியை அடைந்திருக்கின்றார்கள். நாம் ஆட்சி அமைக்க போட்டியிடவில்லை. தமிழர்களின் விடுதலைக்காக போராடுகின்றவர்கள். இதனை எண்ணி மதிப்பீடு செய்து வீழ்ந்து கிடக்கவில்லை. 

தேர்தல் மட்டும் ஓர் இனத்தின் விடுதலையை தீர்மானிப்பதில்லை . அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை பார்க்கின்றபொழுது அவர்கள் வெற்றி தோல்வியை அல்ல எழுந்து போராடுவதனையே வரலாறாகப் பாரத்திருக்கின்றோம். நாடாளெமன்றிலே நிறைவேற்றி அதிகார முறையை பலப்படுத்த , சர்வாதிகாரத்தை நோக்கி அதாவது ஜனநாயக பலம் கொண்ட நாட்டிற்குப் பதிலாக இராணுவ பலம்கொண்ட ஒரு நாடாக இந்த நாட்டை மாற்றியமைக்க முயற்சிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனை ஏற்க முடியாது. அதற்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளோம்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக அரசு 20ம் திருத்தத்திற்கும் அப்பால் புதிய அரசியல் அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று ஓர் பிரேரணையை முன் வைக்கின்றார்கள் . இவை இரண்டிலும் நாம் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். இந்த சர்வாதிகார ஆட்சி முறையை எதிர்க்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் ஒன்று பட்டு நிற்கும் தீவிர முயற்சியை நாம் எடுக்க வேண்டும். நாடு முழுவதும் ஜனநாயக சந்திகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர.கள் , முஸ்லீம் மக்கள் , மலையக மக்கள் பாராளுமன்றில் ஒன்றுபட்டு நிற்கும் நிலமையை அடைந்தே ஆக வேண்டும். 

இவற்றை அடைய எங்கள் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் இதனைவிட எமது கட்சிக்குள் அதாவது தமிழ் அரசுக் கட்சிக்குள் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் எழுந்த விமர்சணங்களை தூக்கி வைத்துவிட்டு இனத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு தீவிரமாக செயல்பட வேண்டும். அதனை நாம் செய்வோம் என்பதன் அறிகுறியாகவே நான் இங்கே வந்து இந்தக் கருத்தை முன் வைக்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post