யாழில் காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை என்கிறார் அங்கஐன் - Yarl Voice யாழில் காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை என்கிறார் அங்கஐன் - Yarl Voice

யாழில் காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை என்கிறார் அங்கஐன்


 யாழ் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்த உரிய நடவடிக்கையை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்தார். மேலும் இந்த விடயங்கள் குறித்து குழுவொன்றையும் அமைத்து விரைந்து செயற்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம்  வீட்டுத்திட்டம் தொடர்பான  மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது

யாழ் மாவட்டத்தில்  மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

குறித்த கூட்டத்தில்  யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் பிரதேச செயலர்கள் துறைசார் அதிகாரிகள் இ பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இமற்றும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டதோடு அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுதிட்டங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மேலும்இ நீண்டகாலமாக இடம்பெயர்ந்து சொந்தக் காணியற்ற நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருபர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post