யாழில் பணியாற்றிய தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலாளி மேல் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு - Yarl Voice யாழில் பணியாற்றிய தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலாளி மேல் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு - Yarl Voice

யாழில் பணியாற்றிய தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிலாளி மேல் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர்இ நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்ற நிலையில் தவறி விழுந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.

அவர் மதுபோதையில் இருந்தமையால் தடுமாறி நிலத்தில் வீழ்ந்துள்ளார் என்று மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகள் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post