ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு - படங்கள் - Yarl Voice ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு - படங்கள் - Yarl Voice

ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு - படங்கள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பும் கௌரவிப்பும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதன் போது விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாலைகள் அணிவித்து வர வேற்கப்பட்டனர்.

 இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மதகுரு தலைவர்களின் ஆசியுரைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் அக் கட்சியின் தலைவரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான வினொ நோதராலிங்கம், கருணாகரம் nஐனா ஆகியோரே வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கட்சியின் உறுப்பினரும் யாழ் மாநகர சபை பிரதி முதல்வருமான துரைராசா ஈசன் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் கட்சிய்ன தலைவர் செல்வம் அடைந்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன், இளைஞரணிச் செயலாளர் சபா குகதாஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் நிரோஷ் ஆகியோரும் உரையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 






0/Post a Comment/Comments

Previous Post Next Post