சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒன்றிணையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா - Yarl Voice சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒன்றிணையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா - Yarl Voice

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒன்றிணையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா


சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா ஜப்பான் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன.

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஜப்பான் அமைச்சர் ஹிரோஷி கஜியமா அவுஸ்ரேலிய அமைச்சர் சிமோன் பிர்மிங்காம் ஆகியோர் காணாலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்இ இந்தோ பசுபிக் மண்டலத்தில் சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக 3 நாடுகளும் இணைந்து செயற்பட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வர்த்தகத்திற்கான வினியோகச் சங்கிலியை பலப்படுத்துவதற்கான முன்னெடுப்பை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post