தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் - யாழில் ரெலோ எம்பி கருணாகரம் கோரிக்கை - Yarl Voice தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் - யாழில் ரெலோ எம்பி கருணாகரம் கோரிக்கை - Yarl Voice

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் - யாழில் ரெலோ எம்பி கருணாகரம் கோரிக்கை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் யாழில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பும் கௌரவிப்பும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்த கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

நுடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூடு;டமைப்பிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. ஆந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரெலோ கடந்த தேர்தலில் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்த போதும் இந்த முறை அதற்கும் அதிகமாக மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. 

ஆகவே கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள சரிவிற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆராய்வது மட்டுமல்லாமல் சுய பரிசொதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமானது. அதுவே எதிர்காலத்தில் இந்தகைய சரிவுகளிலிலருந்து மீண்டு வரக் கூடியதாக இருக்கும்.

மேலும் பட கட்சிகள் அங்கம் வகிக்கின்ற கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். கூட்டமைப்பிற்குள் நிலையாக கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்படாததால் கூட்டமைப்பிற்குள் பல சர்ச்சைகளும் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதே வேளை கடந்த தேர்தலை எடுத்துக் கொண்டால் கூட்டமைப்பில் நாங்கள் எதிரிகளுடன் போட்டியிட்டு அல்லது போராடியதை விடவும் கூட்டமைப்பிற்குள்ளெ நாங்கள் போராடியது தான் அதிகம். இந்த நிலை மாற வேண்டமாக இருந்தால் கட்சிப் பதிவு அவசியம்.

குடந்த காலங்களில் கூட்டமைப்பு என்ன செய்தது என்று பலர் கேட்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அந்தத் தரப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆகவே இனிமேல் அவர்கள் என்ன செய்கின்றனர் என்ன செய்தனர் என்று கேட்க வேண்டும். அவர்களும் இதற்கப் பதிலளிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் தெற்கில் கடும் இனவாத ரீதியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற இடத்தில் அதனை நாம் பலமாக நின்று எதிர் கொள்ள வேண்டும். அதற்கு கூட்டமைப்பு மாத்திரமல்லாமல் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.  அவ்வாறு ஒன்றுபட்டுச் செயற்படுவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது என்றார். 

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post