நிதியியல் விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் யாழில் விசேட கூட்டம் - Yarl Voice நிதியியல் விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் யாழில் விசேட கூட்டம் - Yarl Voice

நிதியியல் விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் யாழில் விசேட கூட்டம்


யாழ் மாவட்டத்தின் நிதியியல் தொடர்பான பிரச்சனைகள் யாழ் மாவட்ட இன்று காலை (07) செயலகத்தில் ஆராயப்படுகிறது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர்  அங்கஜன் இராமநாதன்இ மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் று.னு. லக்ஷ்மன்இ பிரதி ஆளுநர்இ துணை ஆளுநர்கள்இ மாவட்ட அரச அதிபர் திரு. கே. மகேசன்இ மேலதிக அரச அதிபர்கள்இ திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மத்திய மற்றும் மாகாண அரசாங்க நிர்வாகத்தின் மூத்த பிரதிநிதிகள்இ கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள்இ மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள்இ விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள்இ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்  அங்கஜன் இராமநாதனினால் குறிப்பாக தற்சமயம் கொரோனா பேரிடரினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட இக் காலப்பகுதியில் கடன்களை மீட்பது குறித்தும் முறைசாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை மற்றும் வழிமுறைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தபட்டது. குறிப்பாக இதுபோன்ற கடன்களை பயனாளிகளுக்கு இடையூறு வழங்காமல் மீட்பது பற்றியும் கவனம் செலுத்தபட்டது.

நுண்நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட யாழ் மாவட்டத்திலுள்ள முறையான மற்றும் முறைசாரா நிதி நிறுவனங்களைக் கையாள்வதில் வர்த்தக நிறுவனங்கள்இ பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடுவதற்காகவும் தீர்வுகளை பெற்றுகொடுக்கவும் இக் கூட்டம் பெரிதும் வழிசமைத்தது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post