ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற நிலைணில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பொலிஸார் மிரட்டி வருவதாக வர்த்தகர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் நாளையதினம் வடக்கு கிழக்கு மழுவதும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் யாழ் நகரம் உள்பட மாவட்டத்தின் பல இடங்கிலும் உள்ள வர்த்த நிலையங்களுக்கு சென்ற பொலிஸார் நாளையதினம் கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றனர்.
இதற்கு மேலாக வர்த்தகர்களை பொலிஸ் நிலையம் அழைத்துள்ள பொலிஸார் கடைகளைப் பூட்டக் கூடாதென்றும் கட்டாயம் கடைகளைத் திறக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு வழமைபோன்று கடைகளை நாளைக்கு திறக்க வேண்டுமென்றும் அவ்வாறு திறக்காதவிடத்து மறுநாள் பொலிஸ் நிலையம் வரவேண்டி வருமென்றும் அச்சுறுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த ஹர்த்தாலைக் குழப்புவதற்கு அரசாங்கம் பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடராகவே வர்த்தக நிலையங்களை திறக்குமர்று வர்த்தகர்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment