கூட்டமைப்பின் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல் - Yarl Voice கூட்டமைப்பின் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல் - Yarl Voice

கூட்டமைப்பின் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்
கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, இன்று மாலை இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாட்டைப் பதிவு செய்துள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post