மூலிகை மரம் நாட்டும் செயற்திட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice மூலிகை மரம் நாட்டும் செயற்திட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice

மூலிகை மரம் நாட்டும் செயற்திட்டம் யாழில் ஆரம்பம்
மூலிகையினால் தன்னிறைவு திட்டத்தின்கீழ்  யாழ்மாவட்ட செயலகத்தில் மூலிகை மரம் மேலதிக அரசாங்க அதிபரினால் நாட்டிவைக்கப்பட்டது..

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள வைத்தியர்கள் ,உத்தியோகத்தர்கள்,யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் 

மூலிகையினால் தன்னிறைவு ""என்ற நாட்டின் ஜனாதிபதியின் கோரிக்கைக்கிணங்க இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூலிகை மரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் இன்று சுதேச மருத்துவ திணைக்களத்தினரால்  நடைமுறைப் படுத்தப்படுகின்றது

  இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும்  மூலிகை மரம்நாட்டப்பட்டுள்ளது மூலிகையினால் தன்னிறைவு என்ற செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்றைய தினம் இந்த மரம் நாட்டப்பட்டுள்ளது 

வடக்கு மாகாணம் முழுவதும்   சமூக மருத்துவ உத்தியோகத்தர் களினால் ஒவ்வொரு திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் வாயிலாக  மூலிகை மரங்கள் நடும் திட்டம் ஆரம்பிக்கப் படுகின்றது 

இந்த மூலிகையினால் ஏற்படும் பயன்கள் மேலும் உடலில் ஏற்படுகின்ற வியாதிகளை சிறிதளவேனும் கட்டுப்படுத்த முடியும்  எமது நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்துக் கொள் வதன் மூலம் கூடுதலான வியாதிகளை நாங்கள் எமது வீட்டில் இருந்தபடியே நாங்கள் நோய்களை குணப்படுத்திக்கொள்ள முடியும் ஏனென்றால் பல வைத்திய சாலைகளில் நிறைய பேர் போய் அங்கே இடி நெருக்கடிகளையும நேர காலத்தையும் விரயப்படுத்துகிறார்கள்


 எனவே இவ்வாறான மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து மூலிகை அருந்துவதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.. 

ஜனாதிபதியினால் குறித்த செயற்திட்டம் அ றிவிக்கப்பட்டதற்கிணங்க இந்த செயல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது இந்த செயற்திட்டத்தினை வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ஊடாக நடைமுறைப்படுத்தவிருக்கிறோம்


ஜனாதிபதியினால் மூலிகை வாரமாக அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த செயற்திட்டம் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகிறது எனினும் இது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் எனினும் மூலிகை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கம் என  ஆயுள்வேத  திணைக்கள ஒருங்கிணைப்பாளர்கா.நடராசா
தெரிவித்தார்..


0/Post a Comment/Comments

Previous Post Next Post