யாழிலுள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அங்கஐன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice யாழிலுள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அங்கஐன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice

யாழிலுள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அங்கஐன் விடுத்துள்ள அழைப்பு


நானும் யாருக்கும் எதிரியில்லை. என்னையும் யாரும் எதிரியாகப் பார்க்க வேண்டாம். எனவே மக்களுக்கு சேவையாற்ற அரசியற் பேதங்களைக் கடந்து இணைந்து செயற்பட வேண்டும். ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்குவதுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

இவ்வாறு யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஐன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். 

யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகக் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுக் கொண்ட பின்னர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

விமர்சனங்கள் என்பது ஆரொக்கியமானதாக அல்லது உண்மையானதாக இருக்க வேண்டும். அதனை விடுத்து அரசியல் நோக்கங்களுக்கான விமர்சனங்களாவோ அல்லது கட்டுக் கதைகளாகவோ இருக்க கூடாது. 

ஆனாலும் இத்தகைய அரசியல் ரீதியான விமர்சனங்களே என்னை வளர்த்துவிட்டது. அந்த விமர்சனங்களே மேலும் என்னை வளர்க்கும். 
ஆகவே நான் யாருக்கும் எதிராக செயற்படுவதில்லை. அதே போல சட்டத்தையோ அல்லது அதிகாரத்தையோ மீறியும் செயற்படுவதில்லை. 

எனக்கு வழங்கிய பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் எனது செயற்பாடுகள் அமைகின்றது. அதனை நான் செய்கின்ற போது அரசியலுக்காக சிலர் தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆகையினால் இத்தகைய விமர்சனங்களை தாண்டியும் எனது பயணம் தொடர்ந்தும் சிப்பாக அமையும்.

இதே வேளை மாவட்டத்தில் மக்கள் எனக்கு மட்டும் வாக்களிக்கவில்லை. ஏனைய பலருக்கும் வாக்களித்தள்ளனர். ஆகவே அந்த மக்களுக்கான சேவைகளை மேற்கொள்கின்ற போது அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கட்சி பேதங்களுக்ளுக்கு அப்பாற் சென்று மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விற்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post