யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்ற அங்கஐன்.. - Yarl Voice யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்ற அங்கஐன்.. - Yarl Voice

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்ற அங்கஐன்..


யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் . 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் (01) திறந்து வைக்கப்பட்டது . 

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இ நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும்  யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களால் அலுவலகத்தை திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் மாவட்டச் செயலாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் செயலாளருமான க.மகேசன் முன்னிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளையும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் .
 
நிகழ்வில் பொலிஸார் முப்படையினர் சர்வ மத தலைவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் திணைக்களங்களின் ஆணையாளர் மற்றும் செயலாளர்கள்  பிரதேச செயலாளர்கள் ஊடகவியலாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 
கடமைகளை பொறுப்பேற்ற அங்கஜன் இராமநாதன் இந்த பணி எனது தோள்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய பொறுப்பு அதை நான் எனது திறமைகளினால் சிறப்பாகச் செய்வேன். 

பாகுபாடான கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கைகோர்த்து ஒன்றுபடவும் நான் அழைக்கின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post