தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முழு விபரம் உள்ளே... - Yarl Voice தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முழு விபரம் உள்ளே... - Yarl Voice

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முழு விபரம் உள்ளே...


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,082 பேரும் பிரேசிலில் 830 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 69 லட்சத்து 38 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,91,046
பிரேசில் - 1,24,729
இந்தியா - 67,376
மெக்சிகோ - 65,816
இங்கிலாந்து - 41,527
இத்தாலி - 35,507
பிரான்ஸ் - 30,706
பெரு - 29,405
ஸ்பெயின் - 29,234
ஈரான் - 21,926
கொலம்பியா - 20,618

0/Post a Comment/Comments

Previous Post Next Post