தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் நடைபயண ஊர்திப் பவணி - கயேந்திரன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் நடைபயண ஊர்திப் பவணி - கயேந்திரன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice

தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் நடைபயண ஊர்திப் பவணி - கயேந்திரன் விடுத்துள்ள அழைப்பு


தியாக தீபம் திலீபனின் நினைவை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த வருடமும் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவணி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கயேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

எதிர்வரும் 15 ஆம் திகதி தயாக தீபம் தீலிபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ:வுகள் ஆரம்பமாகிறது. வழமை போன்று அந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த முறை போன்று இந்த முறையும் வவுனியாவில் இருந்த திருவுருவப் படம் தாங்கிய நடைபவணி ஊர்திப் பவணி நடைபெற இருக்கிறது.

 அதற்கான ஏற்பாடுகளை முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு மேற்கொண்டுள்ளதாகவும் அனைத்துத் தரப்பினர்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கயெந்திரன் கேட்டுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post