சட்டவிரோதமாக வெட்டப்பட இருந்த கடலாமைகள் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடி - Yarl Voice சட்டவிரோதமாக வெட்டப்பட இருந்த கடலாமைகள் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடி - Yarl Voice

சட்டவிரோதமாக வெட்டப்பட இருந்த கடலாமைகள் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடிசட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் நேற்று இரவு யாழ் விசேட அதிரடிபொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.

யாழ் விசேட அதிரடி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெக்கப்பட்டது.

குறித்த கடலாமைகள் கொழும்புத்துறை வள்ளுவர் புரத்தில் அமைந்துள்ள வீடுஒன்றில் வைத்து கைப்பற்றப்பட்டன. இதன் போது 36 வயது உடைய வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடலமைகள்,மற்றும் வீட்டு உரிமையாளரும் யாழ் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் யாழ் விசேட அதிரடிபொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

காலை 11 மணியளவில் வீட்டு உரிமையாளரும் கடலமையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்க உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post