பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உந்துருளிகள் வழங்கி வைத்த ஐனாதீபதி - Yarl Voice பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உந்துருளிகள் வழங்கி வைத்த ஐனாதீபதி - Yarl Voice

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உந்துருளிகள் வழங்கி வைத்த ஐனாதீபதி



கொவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் தமது உயிரை பணயம் வைத்து செயலாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அடையாள ரீதியாக உந்துருளிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதிகாரபூர்வமான இந்த வழங்கல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்றது. 

2015ஆம் ஆண்டு முதல் பொது சுகாதார பரிசோதகர் எவருக்கும் உந்துருளிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதன் அடிப்படையில் - நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 26 சுகாதார வைத்திய பிரிவுகளில் சேவையாற்றுகின்ற - 749 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும், மேலும் முதன்மை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 56 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பட்டன.

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படும் போது - 02 வருட முழுமையான பயிற்சிநெறிக்கு உள்வாங்கப்படுவர்.

பயிற்சிக் காலத்தை நீடித்து பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பெற்றுத்தரப்படும்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஷேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, கொவிட் அவசர சிகிச்சைக்காக சுகாதார கட்டமைப்பை தயார்படுத்தும் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post