விமல் வீரவன்சவின் கருத்து காரணமாக ஓய்வு பெறமாட்டேன் - மஹிந்த தேசப்பிரிய திட்டவட்டம் - Yarl Voice விமல் வீரவன்சவின் கருத்து காரணமாக ஓய்வு பெறமாட்டேன் - மஹிந்த தேசப்பிரிய திட்டவட்டம் - Yarl Voice

விமல் வீரவன்சவின் கருத்து காரணமாக ஓய்வு பெறமாட்டேன் - மஹிந்த தேசப்பிரிய திட்டவட்டம்


அமைச்சர் விமல் வீரவன்ச  அண்மையில்  வெளியிட்டுள்ள கருத்து காரணமாக  தற்போதைய சூழ்நிலையில் ஓய்வுபெறமாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது என விமல் வீரவன்ச  அண்மையில்  நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது 'ஒரு மாதத்திற்கு முன்பே ஓய்வு பெற திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக மாகாண சபை தேர்தல் முடியும் வரை ஒருபோதும் ஓய்வுப்பெறமாட்டேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post