விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர் - Yarl Voice விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர் - Yarl Voice

விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய்யின் அழைப்புக்காக காத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் ஆடுகளம் விசாரணை வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் நான்கு திரைப்படங்களில் தனுஷ் நடித்துள்ளார். 

இந்த நிலையில் முழுக்க முழுக்க தனுஷுடன் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்த இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக மற்ற நடிகர்களின் படங்களையும் இயக்கி வருகிறார். தற்போது சூரி நடிக்கும் படம் ஒன்றையும் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்க உள்ளார். 

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றிமாறன் இணைந்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வெற்றிமாறன் 'முதலில் சூரி படத்தை முடித்துவிட்டு அதன்பின் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் பணியை தொடங்க போவதாகவும் அதற்கு அடுத்தபடியாக விஜய்க்காக கதையை தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்றும் விஜய்யின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post