தனுரொக் மீது பட்டப்பகலில் யாழ் நகரில் வாள்வெட்டு தாக்குதல் - Yarl Voice தனுரொக் மீது பட்டப்பகலில் யாழ் நகரில் வாள்வெட்டு தாக்குதல் - Yarl Voice

தனுரொக் மீது பட்டப்பகலில் யாழ் நகரில் வாள்வெட்டு தாக்குதல்



தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின்  மீது யாழில் இன்று வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post