சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த பல கோடி சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்? - Yarl Voice சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த பல கோடி சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்? - Yarl Voice

சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த பல கோடி சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்?


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவியான சசிகலாவின் பினாமி பெயர்களில் இருந்த 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான 65 சொத்துக்களை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

இதனையடுத்து போயஸ்கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில் சசிகலா குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை ஆரம்பித்து 1500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்இ சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும்இ சோதனையில் சிக்கின.

கிடைத்த ஆவணங்கள் படி போலி நிறுவனங்கள் சொத்துக்கள் விபரங்களை வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். 

அதைத் தொடர்ந்து 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை 2019 நவம்பரில் வருமான வரித் துறை முடக்கியது.

இந்த நிலையில் மேலும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வருமான வரித் துறையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post