கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட பிள்ளையான் - Yarl Voice கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட பிள்ளையான் - Yarl Voice

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட பிள்ளையான்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவரை நாளை முன்னிலைப்படுத்துவதற்காகவே அவர் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளிலும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்கவுள்ளதுடன்இ எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை சிவநேசத்துரை சந்திரகாந்தன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கவைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post