தெல்லிப்பளையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க பார்த்தீபன் வலியுறுத்து - Yarl Voice தெல்லிப்பளையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க பார்த்தீபன் வலியுறுத்து - Yarl Voice

தெல்லிப்பளையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க பார்த்தீபன் வலியுறுத்துயாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் காணப்படுகின்ற மருத்துவக் கழிவுகளை எரியுட்டுகின்ற தொகுதி உரிய முறையில் தொழிற்படவில்லை என்ற பல குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆதில் முக்கியமாக மருத்துவக் கழிவுகளினை எரியுட்டும் போதும் வெளிவரும் புகையினை 80 அடி உயரமான புகைக்கூட்டின் ஊடாகவே வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இங்கு காணப்படுகின்ற அத் தொகுதியின் புகைக் கூட்டின் உயரமானது ஏறத்தாழ 30 அடி முதல் 40 அடி வரையே காணப்படுகின்றது.

இவ்வாறு 80 அடி உயரமான புகைகூட்டின் வழியே தான் மருத்துவக்கழிவுகளை தகனம் செய்கின்ற போது புகையினை வெளியேற்ற வேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அத்தொகுதியில் மருத்துவக் கழிவுகளினைத்  எரியூட்டும் போது பின்பற்றப்படும் முறைமை மிகுந்த அதிர்ச்சியை அழிக்கின்றது ஏன்எனில் அங்கு மருத்துவக்கழிவுகளினை எரியூட்டும் போது எரியூட்டியின் கதவுகளை மூடாமல் திறந்து விட்டவிடப்பட்டே எரியூட்டப்படுகின்றன இந் நிலை மிக  மோசமான விளைவுகளைக் கொண்டு தரவல்லது என்று கூறப்படுகின்றது.

அப்பகுதியில் மருத்துவப்பொருட்களை எரியூட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இது தொடர்பில் இன்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது என்னால் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாநகர எல்லைக்கு வெளியில் குறித்த கொகுதி காணப்படுவதன் காரணமாக குறித்த செயல்முறை தொடர்பாக எம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது. அது தொடர்பில் அப்பகுதி உள்ளூடாட்சி மன்றங்களோ அல்லது பிராந்திய சுகாதார பணிமனையோ தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் யாழ்.மாநகர சபை எல்லைகக்குள் காணப்படுகின்ற சில வைத்தியசாலைகள் குறித்த மருத்துவக் கழிவுகளினை அனுமதியின்றி குறித்த எரியூட்டும் தொகுதி நிலையத்தின் பின்கதவு வழியாக கொண்டு சென்று எரியூட்டுவதாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். 

அந்தவகையில் யாழ். மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 10க்கும் மேற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் அவர்களுடைய மருத்துவக்கழிவுகளிகள் மற்றும் சத்திரச்சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடல் அவயங்களினை எவ்வாறு எப்பொறிமுறையின் கீழ் அகற்றுகின்றார்கள் என்பது தொடர்பாக யாழ்.மாநகர சபை உடனடியாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும் என்பதுடன் அது தொடர்பான அறிக்கையினை பெற்று சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கேட்டதற்கு இணங்க சபையின் ஏகமனதான முடிவின் பிரகாரம் கௌரவ முதல்வர் அவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு முதல் அனைத்த தனியார் வைத்தியசாலைகளிலும் குறித்த முறை தொடர்பில் விளக்கம் கேட்டு அவர்களின் பதில்களைப் பெற்று சமர்பிக்குமாறு பணித்தார்.

குறித்த எரியூட்டும் தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக அவ்பகுதி உள்ளுராட்சி மன்றம் மற்றும் பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் கரிசனை செலுத்தவேண்டும்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் காணப்படுகின்ற மருத்துவக் கழிவுகளை எரியுட்டுகின்ற தொகுதி உரிய முறையில் தொழிற்படவில்லை என்ற பல குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆதில் முக்கியமாக மருத்துவக் கழிவுகளினை எரியுட்டும் போதும் வெளிவரும் புகையினை 80 அடி உயரமான புகைக்கூட்டின் ஊடாகவே வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இங்கு காணப்படுகின்ற அத் தொகுதியின் புகைக் கூட்டின் உயரமானது ஏறத்தாழ 30 அடி முதல் 40 அடி வரையே காணப்படுகின்றது.

இவ்வாறு 80 அடி உயரமான புகைகூட்டின் வழியே தான் மருத்துவக்கழிவுகளை தகனம் செய்கின்ற போது புகையினை வெளியேற்ற வேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அத்தொகுதியில் மருத்துவக் கழிவுகளினைத்  எரியூட்டும் போது பின்பற்றப்படும் முறைமை மிகுந்த அதிர்ச்சியை அழிக்கின்றது ஏன்எனில் அங்கு மருத்துவக்கழிவுகளினை எரியூட்டும் போது எரியூட்டியின் கதவுகளை மூடாமல் திறந்து விட்டவிடப்பட்டே எரியூட்டப்படுகின்றன இந் நிலை மிக  மோசமான விளைவுகளைக் கொண்டு தரவல்லது என்று கூறப்படுகின்றது.

அப்பகுதியில் மருத்துவப்பொருட்களை எரியூட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இது தொடர்பில் இன்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது என்னால் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாநகர எல்லைக்கு வெளியில் குறித்த கொகுதி காணப்படுவதன் காரணமாக குறித்த செயல்முறை தொடர்பாக எம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது. அது தொடர்பில் அப்பகுதி உள்ளூடாட்சி மன்றங்களோ அல்லது பிராந்திய சுகாதார பணிமனையோ தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் யாழ்.மாநகர சபை எல்லைகக்குள் காணப்படுகின்ற சில வைத்தியசாலைகள் குறித்த மருத்துவக் கழிவுகளினை அனுமதியின்றி குறித்த எரியூட்டும் தொகுதி நிலையத்தின் பின்கதவு வழியாக கொண்டு சென்று எரியூட்டுவதாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். 

அந்தவகையில் யாழ். மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 10க்கும் மேற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் அவர்களுடைய மருத்துவக்கழிவுகளிகள் மற்றும் சத்திரச்சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடல் அவயங்களினை எவ்வாறு எப்பொறிமுறையின் கீழ் அகற்றுகின்றார்கள் என்பது தொடர்பாக யாழ்.மாநகர சபை உடனடியாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும் என்பதுடன் அது தொடர்பான அறிக்கையினை பெற்று சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கேட்டதற்கு இணங்க சபையின் ஏகமனதான முடிவின் பிரகாரம் கௌரவ முதல்வர் அவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு முதல் அனைத்த தனியார் வைத்தியசாலைகளிலும் குறித்த முறை தொடர்பில் விளக்கம் கேட்டு அவர்களின் பதில்களைப் பெற்று சமர்பிக்குமாறு பணித்தார்.

குறித்த எரியூட்டும் தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக அவ்பகுதி உள்ளுராட்சி மன்றம் மற்றும் பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் கரிசனை செலுத்தவேண்டும்.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிவரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post