யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள் - வைத்தியசாலை புள்ளி விபரங்களில் அதிர்ச்சி தகவல் - Yarl Voice யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள் - வைத்தியசாலை புள்ளி விபரங்களில் அதிர்ச்சி தகவல் - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள் - வைத்தியசாலை புள்ளி விபரங்களில் அதிர்ச்சி தகவல்


யாழ். குடாநாட்டின் தற்கொலை முயற்சி கடந்த 4 வருடங்களாக 500 ஐ தாண்டிய எண்ணிக்கையிலேயே இருப்பதாக போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன.

யுத்தத்திற்குப் பின்னர் வட மாகாணந்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றன. 2013ம் ஆண்டில் இருந்து எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதிலும் வருடாந்தம் 500ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2013ம் ஆண்டு 714பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு 2014ல் 640பேரும் இ 2015ல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.  2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆககானப்பட்டது.

இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது

 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை இதில் 104  பேர் மரணமடைந் துள்ளதாகவும் தெரிவிக்கும் அதே நேரம் 2020ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதம் வரையில்  361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post