ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு! - Yarl Voice ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு! - Yarl Voice

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு!


ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபைஇ இந்தத் தொடரை நவம்பர் 14 முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் Innovative Production Group உடன் ஒப்பந்தம் செய்து போட்டியை நிர்வகிக்கவும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கு உரிமங்களின் உரிமம்இ ஒளிபரப்புஇ தயாரிப்பு மற்றும் நிகழ்வின் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 23 லீக் போட்டிகளும் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 3 சர்வதேச அரங்குகளில் நடைபெறவுள்ளன.

கொழும்பு கண்டி காலி தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் பெயரிடப்பட்ட ஐந்து அணிகள் இந்த லீக்கில் பங்கேற்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post