கொரோனா கட்டுப்பாடு; வட கொரியாவில் கண்டதும் சுட உத்தரவு - Yarl Voice கொரோனா கட்டுப்பாடு; வட கொரியாவில் கண்டதும் சுட உத்தரவு - Yarl Voice

கொரோனா கட்டுப்பாடு; வட கொரியாவில் கண்டதும் சுட உத்தரவு


சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்துக்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல நாட்டின் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டுஇ கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப்பகுதியில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவ முகாம்களுக்கு தேவையான துப்பாக்கி குண்டுகளையும் வடகொரிய அரசாங்கம் லொறிகளில் அனுப்பி வைத்துள்ளது.

மேலும்இ துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை ரீதியான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு இரு நாடுகளும் எல்லைகளை மூடி வர்த்தகத்தை நிறுத்திய போதிலும் எல்லை அருகாமையில் உள்ள மக்கள் ரகசியமாக வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post