அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நீக்க முடியாது. ஆயினும் அதனை நீக்குவதாக அரச தரப்பில் சிலர் கருத்து வெளியிடுகின்ற போதும் அதனை அரசாங்கம் நீக்காது என்றும் அவ்வாறு நீக்குவதற்கு இந்தியா இடமளிக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நீக்கப்படாது. மகிந்த ராஐபக்ச ஐனாதிபதிhக இருந்த காலத்தில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதைக் கட்டியெழுப்பி அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என்று மூன்று தடைவ இந்தியாவிற்கு எழுத்திலே வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியோடு நடந்த இணையவழி பேச்சுவார்த்தையின் போது கூட இந்த விடயம் பேசப்பட்டிருப்பதாகவும் 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவதில் இருந்து தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அடைகிற வரைக்கும் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை இந்தியா தரப்பில் இருந்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் ஒரு கூட்டறிக்கையிலே வெளிவந்திருக்கிறது. ஆகையினால் இப்படியான பின்னணியில் மாகாணசபை முறைமையை அரசாங்கம் இல்லாமல் செய்யாது என்று தான் நான் நினைக்கிறேன்.
மேலும் அரசிலும் எல்லாரும் இதனைச் சொல்லவில்லை. சிலர் தான் இதனை சொல்கிறார்கள். அதாவது சிலர் மாற்ற வேண்டம் என்கின்றனர். இன்னும் சிலர் அதனை தொட மாட்டோம் என்கின்றனர்.
ஆனால் அது ஏற்படுத்தப்பட்ட பிண்ணணியில் இருந்து பார்க்கிற பொழுது அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலே செய்யப்பட்டிருக்கின்றது.
அந்த ஒப்பந்தத்திற்குரிய மற்றைய நாடு எங்களுடைய அண்டைய நாடு. அது ஒரு பிராந்திய வல்லரசு. ஆகையினாலே இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுக்கிற பொழுது இலங்கை அரசாங்கம் அதை இல்லமால் பண்ணாது. இந்தியாவும் அதனை நிக்க இடமளிக்காது என்றே கருதுகின்றேன்.
Post a Comment