பேச்சாளர் பதவி தொடர்பில் பங்காளிகளின் மிரட்டல்களை சீரியசாக எடுக்க தேவையில்லை - சுமந்திரன் - Yarl Voice பேச்சாளர் பதவி தொடர்பில் பங்காளிகளின் மிரட்டல்களை சீரியசாக எடுக்க தேவையில்லை - சுமந்திரன் - Yarl Voice

பேச்சாளர் பதவி தொடர்பில் பங்காளிகளின் மிரட்டல்களை சீரியசாக எடுக்க தேவையில்லை - சுமந்திரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிகளில் சிலவேளைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் தற்பொதைய பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பில் சில வேளைகளில் பங்காளிக் கட்சிகள் செய்கின்ற மிர்டல்கள் தான் பேச்சாளர் பதவிகளிலும் செய்யப்படுவதாகவும் அதனை சீரியசாக எடுக்கத் தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதிவி குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது..

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை பாராளுமன்றக் குழு நியமனம் செய்வது வழக்கம். பாரர்ளுமன்றக் குழுவில் இன்னும் அந்த நியமனங்கள் செய்யப்படவில்லை. அது செய்யப்படுகிற பொழுது சில வேளைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இதேவேளை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பேச்சாளர் மற்றும் கொரடா பதவிகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்று கோருகின்றதுடன் அவ்வாறு மாற்றம் ஏற்படாதவிடத்து மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுமந்திரன்..

அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. பாரர்ளுமன்றக் குழுவில் அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும். அது என்னவாக இருந்தாலும் அந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ஆகையினால் பாராளுமன்றக் குழு கூடி தீர்மானம் எடுக்கும வரை பொறுத்திருந்த பார்க்க வேண்டும். மேலும் இந்தப் பதவி நிலைகள் தொடர்பில் சதாரணமாக அவர்கள் செய்கிற ஒரு மிரட்டல் தான் அது. அதனை நாங்கள் அவ்வளவு சீரியசாக எடுக்க தேவையில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post