அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் 20 இற்கு ஆதரவை வழங்குவது தமது கண்களை தாமே குத்துவதற்கு ஒப்பானது - விக்கினேஸ்வரன் - Yarl Voice அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் 20 இற்கு ஆதரவை வழங்குவது தமது கண்களை தாமே குத்துவதற்கு ஒப்பானது - விக்கினேஸ்வரன் - Yarl Voice

அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் 20 இற்கு ஆதரவை வழங்குவது தமது கண்களை தாமே குத்துவதற்கு ஒப்பானது - விக்கினேஸ்வரன்அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் பேசும் பிரதிநிதிகள் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவைக் கொடுப்பது என்பது தங்களுடைய கண்களை தாங்களே குத்திக் கொள்வதாக அமையுமென்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார நிலைமையை ஏற்படுத்தும் 20 ஆவது திருத்ம் சிறுபான்மை மக்களுக்கே அல்லலையும் துன்பத்தையும் கொடத்து பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துமென்று சுட்டிக்காட்டிய விக்கினேஸ்வரன் அதனை அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

புதிதாக கொண்டு வரப்படும் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்த 20ஆவது திருத்தம் வந்தால் நாட்டிலே சரவாதிகாரம் தலைதூக்கும். இப்பொழுதே சர்வாதிகாரத்திற்கான அடிப்படை நடவடிக்கைகள் எடுத்தாகிவிட்டது. இவ்வாறான நிலைமையில் தற்பேர்து 20 ஆவது திருத்தமும்; வந்தால் கட்டாயம் சர்வாதிகார நிலைமை ஏற்படும். 

இது சிறுபான்மை மக்களுக்கு அல்லலையும் துன்பத்தையும் கொடுக்கும். ஏனென்றால் இந்த நாட்டின் தலைவராக இருப்பவர் இந்த நாடு என்பது சிங்கள பௌத்த நாடு என்ற எண்ணணத்தை கொண்டவார். 

அப்படியானவர் எப்படியாவது சிறுபான்மையினர் இருக்கும் இடங்களை ஆதி சிங்களவர் வாழ்ந்த இடங்கள் என்று பௌத்தம் இருந்த இடம் என்று சொல்லி காணிகளை கையேற்பதும் விகாரைகளைக் கட்டவதூக பல விடயங்கள் நடக்கும். 

அதற்கு ஏற்ற மாதிரி வடகிழக்கில் படையினர் பெருவாரியாக இருக்கின்றனர. குறிப்பாக் முன்னர் 1 லட்சத்திற்கு குறைவாக இருந்தவர்கள் இப்பொது கூடவாக இருக்கின்றனரர்கள் போல் தெரிகிறது. இவ்வாறு பல பாதிப்புக்கள் சிறுபான்மை மக்களுக்கெ ஏற்படும் ஆபத்து உள்ளது.

இவற்றையலெ;லாம் பார்க்கின்ற போது இந்த திருத்தத்திற்கு மற்றவர்கள் எவரும் அதற்கு எதிரப்பு தெரிவிக்காவிட்டாலும் அரசாங்கத்தோடு தொடர்புடைய தமிழ் பேசும் பிரதிநிதிகள் இதனை எதிர்க்க வேண்டும் .அதனை விடுத்து அதற்கு ஆதரவை கொடுப்பது என்பது அவர்களுடைய கண்களை அவர்களே குத்திக் பொள்வதாக அமையும். 

மேலும் சர்வாதிகார நிலைமையை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு பல வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திருத்தத்திற்கு ஆதரவை வழங்காது அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்த திருத்தம் தொடர்பில் பாராளுமன்றிலும் பேச இருக்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post