யாழில் பொலிஸாரால் வீடொன்று முற்றுகை - 50 சாராய போத்தல்கள் மீட்பு - Yarl Voice யாழில் பொலிஸாரால் வீடொன்று முற்றுகை - 50 சாராய போத்தல்கள் மீட்பு - Yarl Voice

யாழில் பொலிஸாரால் வீடொன்று முற்றுகை - 50 சாராய போத்தல்கள் மீட்பு
இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்களை இளவாலைப் பொலிஸார் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் சாராய போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.குறித்த வீட்டினை போலீசார் சோதனையிட்ட போது அங்கு 180 மில்லி லீட்டர் சாராயப்போத்தல்கள் 50 மீட்கப்பட்டது.

மேலும் சாராயல்போத்தல்களை பதுக்கி வைத்த வீட்டின் உரிமையாளரான 48 வயதுடைய சந்தேக நபரும் இளவாலைப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post