யாழில் 500 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தல் - அரச அதிபர் தெரிவிப்பு - Yarl Voice யாழில் 500 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தல் - அரச அதிபர் தெரிவிப்பு - Yarl Voice

யாழில் 500 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தல் - அரச அதிபர் தெரிவிப்பு




யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

தற்போதைய கொரோணா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்


யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோணா நிலவரம் தகட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது அனைவரும்  கவனமாக செயற்பட வேண்டும்   யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள்  சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள் 

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது pcR பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காண ப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் 

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணாதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது இருந்தபோதிலும்  யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோணா  தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் 

அனைவரும்  சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி  கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும்  தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் 
மேலும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post