வர்த்தக நிலையத்தில் பொருட்கள வாங்குவது போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு - பட்டப்பகலில் யாழில் சம்பவம் - Yarl Voice வர்த்தக நிலையத்தில் பொருட்கள வாங்குவது போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு - பட்டப்பகலில் யாழில் சம்பவம் - Yarl Voice

வர்த்தக நிலையத்தில் பொருட்கள வாங்குவது போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு - பட்டப்பகலில் யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவரால் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

யாழ். நகரின் மத்தியில் உள்ள சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை நேரம் பெண்மணி ஒருவரே விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இச் சமயம் ஓர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவர் இறங்கிச் சென்று 20 ரூபாவிற்கு பீடி கோரியுள்ளார்.

இவ்வாறு கோரிய பீடியை வழங்கிய சமயம் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணி கழுத்தில் இருந்த 4 பவுண் தங்கச் சங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு வீதியில் இயங்கு நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்ய முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post