இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா - அமெரிக்க தகவலால் பரபரப்பு - Yarl Voice இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா - அமெரிக்க தகவலால் பரபரப்பு - Yarl Voice

இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா - அமெரிக்க தகவலால் பரபரப்புஇந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க அமைச்சர்  மைக் பொம்பியோ கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கிழக்கு லடாக்கில் சீன இராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுஇ உயிரிழப்புக்களும் பதிவாகின.

இதனைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலும்இ தூதரக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்இ இந்தோ-பசிபிக் நாடுகளான இந்தியாஇ அமெரிக்காஇ ஜப்பான்இ அவுஸ்ரேலியா ஆகிய 4 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் சந்தித்து பேசினர்.

கிழக்கு லடாக்இ இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தென்சீனக்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்களுக்கு மத்தியில்இ இந்த பிராந்தியங்களில் சீனாவின் எழுச்சி குறித்து இந்த நாடுகள் விவாதித்தன.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் ஜெய்சங்கர்இ அமெரிக்காவின் மைக் பொம்பியோ உட்பட 4 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்று தனித்தனியாகவும்இ குழுவாகவும் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய மைக் பாம்பியோஇ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதுஇ இந்தியா – சீன மோதல் குறித்தும் தெரிவித்திருந்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்இ 'மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் வலுவான பொருளாதாரம் கொண்ட 4 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து பேசினோம்.

இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுறுத்தலால் உண்மையான ஆபத்தில் இருக்கின்றன. இந்தியர்கள் தங்கள் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்களை பார்த்து வருகின்றனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி பல பத்தாண்டுகளாக நம்மை ஆதிக்கம் செலுத்த மேற்கு உலகம் அனுமதித்து இருக்கிறது. இதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக நாம் தூங்கிக்கொண்டு இருந்தோம் என்பதை குவாட் நாடுகளின் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் முந்தைய நிர்வாகம் சீனாவிடம் மண்டியிட்டு உள்ளது. எங்கள் அறிவுசார் சொத்துகளை சீனா அடிக்கடி களவாடி இருக்கிறது. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் அவர்களே எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சீனாவின் அத்துமீறலை எதிர்க்கும் போராட்டத்தில் குவாட் உறுப்பு நாடுகளின் கூட்டாளியாகவும்இ பங்காளியாகவும் அமெரிக்காவும் நிச்சயம் இருக்க வேண்டும். அது இந்தியர்களாக இருந்தாலும் சரிஇ அவர்கள் இமயமலையில் வடகிழக்கு பகுதியில் சீனாவுடன் நேருக்குநேர் மோதி வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக வடக்கு எல்லையில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருகிறது.

மொத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அச்சுறுத்தல் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. உலகம் தற்போது விழித்திருக்கிறது. அலை திரும்ப தொடங்கி இருக்கிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என அவர்' மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post