கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் - இல்லாவிட்டால் ஒற்றுமையை நிலைநாட்டுவது கடினம் - சித்தார்த்தன் தெரிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் - இல்லாவிட்டால் ஒற்றுமையை நிலைநாட்டுவது கடினம் - சித்தார்த்தன் தெரிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் - இல்லாவிட்டால் ஒற்றுமையை நிலைநாட்டுவது கடினம் - சித்தார்த்தன் தெரிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகளிலுள்ளவர்களின் சில செயற்பாடுகளே பின்னடைவிற்கு காரணமாக அமைவதால் அந்தப் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படாதவிடத்து கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையை நிலைநாட்டுவது மிகக் கடினம் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னராக கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பின் பதவி நிலைகளிலுள்ளவர்களின் சில செயற்பாடுகளும் இந்த பின்னடைவிற்கு காரணமாக இருக்கின்றதால் அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆயினும் அதில் முக்கியமாக பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதைக் காட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர்களில் நடவடிக்ககைகள் சொல்லாடல்கள் கருத்தக்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம்.

ஆகையினால் பதவி நிலைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும.; அதற்கான முயற்சி எடுக்கப்படுகிறது. அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

மேலும் கூட்டமைப்பாக நாங்கள் ஒருமித்து ஒன்றாக இணைந்த பயணிக்க வேண்டி உள்ளது. ஆகவே கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக கட்சிக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றங்கள் என்பது கூட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்வதாகவே அமைய வேண்டும்.

அதனடிப்படையில் ஒன்றாக ஒருமித்து பயணித்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். ஆகவே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. ஆயினும் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்துகின்ற முயற்சிகள் அல்லது செயற்பாடுகள் தவறினால் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையை நிலை நாட்டவது மிகக் கடினமாக இருக்குமென்ற கருதுகின்றேன். 

 


0/Post a Comment/Comments

Previous Post Next Post