கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவது காலத்தின் கட்டாயம் - கட்சிகளுக்கு சித்தார்த்தன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவது காலத்தின் கட்டாயம் - கட்சிகளுக்கு சித்தார்த்தன் விடுத்துள்ள அழைப்பு - Yarl Voice

கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவது காலத்தின் கட்டாயம் - கட்சிகளுக்கு சித்தார்த்தன் விடுத்துள்ள அழைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக பதீவு செய்யப்பட்டு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் இயங்க வேண்டும். அதனூடாக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே அமைப்பாக இணைந்து பயணிக்க முடியுமென்றும் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென மீண்டும் பங்காளிக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பு பதியப்படாத காரணத்தினால் தான் இதுவரை காலமாக கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் இருந்து வந்தது. அது மாத்திரமல்லாமல் கூட்டமைப்பின் இருந்து விட்டு விலகிய கட்சிகளும் தனிநபர்களும் கூட இதே காரணத்தையும் முன்வைத்திருக்கின்றனர். குறிப்பாக கூட்டமைப்பிற்குள் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் தான் விலகியதாகவும் தெரிவக்கின்றனர்.

ஆகவே கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டள்ள குழப்பங்கள் குழறுபடிகளுக்கு கூட்டமைப்பு பதீவு செய்யப்படுவது அவசிமானது. அவ்வாறு பதீவு செய்யப்பட்டால் அந்தப் பிரச்சனைகள் ஏற்படாதென்றே கருதுகின்றேன். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது. 

ஆகவே தமிழர் தரப்பு பலமாக இருக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு ஒரே அமைப்பாக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு கூட்டமைப்பு செயற்பட்டால் இலக்கை அடைவதற்கு மிக உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறேன
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post