கோத்தாவின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் ஊர்காவற்துறை, நெடுந்தீவு புறக்கணிப்பு - ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டு - Yarl Voice கோத்தாவின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் ஊர்காவற்துறை, நெடுந்தீவு புறக்கணிப்பு - ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டு - Yarl Voice

கோத்தாவின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் ஊர்காவற்துறை, நெடுந்தீவு புறக்கணிப்பு - ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டு

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டில்  ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஒருவருக்கேனும் நியமனம் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை முழுவதும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் இலங்கையின் சகல பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் பயணாளிகள் உள்வாங்கப்பட்டபோதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து ஒருவருக்கேனும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேபோன்று சங்காணை , வேலணை , வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து அடையாளத்திற்காக தலா ஒருவர் வீதம் மட்டுமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேநேரம் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 4 பேருக்கும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஐவருக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறே தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 7 பேரும் , உடுவிலில் இருந்து 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணத்திலேயே அதிக மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவான கோப்பாய் பிரிவில் 10 பேருக்கும் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 9 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதே நேரம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 14 பேருக்கும் , கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 16 பேருக்கும் நியமனம் வழங்கப்படுவதாக மாவட்டச் செயலகத்திற்கு விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post