கடற்கரையிலேயே சட்டவிரோத உபகரணங்களை நூதன முறையில் புதைத்த கில்லாடிகள் - அதிரடியாக சுற்றிவளைத்த நீரியல் வள திணைக்களம் - Yarl Voice கடற்கரையிலேயே சட்டவிரோத உபகரணங்களை நூதன முறையில் புதைத்த கில்லாடிகள் - அதிரடியாக சுற்றிவளைத்த நீரியல் வள திணைக்களம் - Yarl Voice

கடற்கரையிலேயே சட்டவிரோத உபகரணங்களை நூதன முறையில் புதைத்த கில்லாடிகள் - அதிரடியாக சுற்றிவளைத்த நீரியல் வள திணைக்களம்

முல்லைத்தீவு மாத்தளன் கடற்கரைப் பகுதியில் மணலிற்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோத மீன்பிடி உபகரண பொருட்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல்மணலிற்குள் ஓர் பெட்டியை புதைத்து அதற்குள் தடை செய்யப்பட்ட சுருக்குவலை மறைத்து வைத்து தொழில் புரிவதாக திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பிரகாரம் மாவட்ட அதிகாரிள் பொலிசார் சகிதம் சம்பவ இடத்தில் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த வலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சுருக்குவலை சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிவிக்கும்  கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த சான்றுப்பொருள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post