தடுமாறுகிறது தமிரசுக் கட்சி - யாப்பு பின்பற்றப்படுவதில்லை என்றும் சிவகரன் குற்றச்சாட்டு - Yarl Voice தடுமாறுகிறது தமிரசுக் கட்சி - யாப்பு பின்பற்றப்படுவதில்லை என்றும் சிவகரன் குற்றச்சாட்டு - Yarl Voice

தடுமாறுகிறது தமிரசுக் கட்சி - யாப்பு பின்பற்றப்படுவதில்லை என்றும் சிவகரன் குற்றச்சாட்டு




தடுமாறுகிறது தமிழரசுக்கட்சி என அக் கட்சியின் முன்னாள் இளைஞரணிச் செயலாளரும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான வீ.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த விடயம் தொடர்பில் தனது முகநூலில் இட்டுள்ள பதிவிலேயே சிவகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது...

ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு எவரையும் இடைநிறுத்தும் அதிகாரம் இல்லை  பொது செயலாளருக்கு உள்ளக  விசாரணையை   பரிந்துரை செய்யலாம்.

விசாரணைக்குட்படும் நபரிடம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுத்து மூலம் பதில் கோருதல்  வேண்டும். 

மேலதிக தகவல் தேவை என்றால் நேரிலும் அழைத்து விசாரிக்கலாம்.

இடை  நிறுத்தும்  அதிகாரம்  பொதுச்செயலாளருக்கே  உண்டு

சர்வாதிகாரமாக யாரையும் இடைநிறுத்த முடியாது. முதலில் தமிழரசுக் கட்சியின் யாப்பை மிக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஒழுக்காற்று நடவடிக்கைகள் எனும்  தனிப் பகுதி மிக தெளிவாக கோடிகாட்டுகிறது. ..

இவ்வாறான தான்தோன்றித்தனமாகவே திரு.கெளறிகாந்தன் மானிப்பாய்  (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) அவர்களை விளக்கம் இன்றி இடைநிறுத்தியதால்  அவர் நீதி மன்றம் சென்று மீள உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். இந்த முத்தீர்பை இவர்கள் புரியாதது  மிகத் தவறு.

தமிழரசுக்கட்சி தனது யாப்பை  ஒரு போதும் பின்பற்றுவதில்லை  இன்று பலர் யாப்பை மீறி சட்டவிரோதமாக பதவி வகிக்கின்றனர். தற்போதைய  
பதில் பொதுச் செயலாளர்  நியமனத்தில் கூட  தவறுண்டு.  

பதவி நிலைகளை கேள்விக்கு உட்படுத்தி  யாராவது நீதி மன்றம் சென்றால் பல சிக்கல்களை கட்சி  எதிர்கொள்ள நேரிடும்.

தலைவரை எப்போதும் தவறாக வழிகாட்டுபவர் இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரே.

இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள எவரும்  மூத்த உறுப்பினர்கள் இல்லை. ஆகவே அவர்களுக்கு கட்சி யாப்பு புரிதல் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மூத்த கட்சி இப்படி தடுமாறுவது தமிழினத்துக்கே சாபக்கேடு .

எல்லாம் அறமற்ற பதவி மோகமே.....

0/Post a Comment/Comments

Previous Post Next Post