கொழும்பு மாவட்டத்தின் பேலியகொட மீன் சந்தைக்கு யாழில் இருந்தும் கூழர் வாகனங்களில் மீன் கொண்டு சென்று விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
யாழில் பருத்தித்துறை, தாளையடி, பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த பகுதிக்கு மீன் கூழர்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருநத
நூற்றுக் கணக்கானோருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மீன் சந்தைக்கு பல இடங்களிலிருந்தும் பலரும் சென்று வந்திருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாணத்திலும் இருந்தும் பல கூழர் வாகனங்களில் மீன் கொண்டு சென்று வந்திருக்கின்றனர்.
ஆகையினால் யாழில் இருநது
குறித்த மீன் சந்தைக்கு சென்று வந்த அத்தனை பேரையும் பதிவு செய்து கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment