கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ள வேண்டுகோள்




பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற  நடமாட்டங்களை குறைப்பதன் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


இன்று யாழ்ப்பாணம் வணிக கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வணிகர் கழகத்தின் தலைவர் ஆர் ஜெயசேகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்


தற்பொழுது நாட்டில் கொரோணா  பரவல் அதிகரித்து காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறான ஒரு அபாயநிலை இன்னும் ஏற்படவில்லை எனினும் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் கொரோணா தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாகசெயற்பட வேண்டும் 


 யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது தற்போது பாதுகாப்பான ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது எனினும் அந்த நிலையினை தொடர்ச்சியாக பேணுவதற்கு யாழ் மாவட்ட மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்


 குறிப்பாக அநாவசியமற்ற முறையில் வீடுகளை விட்டு வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் இருப்பதன் மூலம் தொற்று  பரவாமல் தடுக்கலாம் அதேபோல் வெளிமாவட்டங்களுக்கான பயணங்களையும் இயன்ற அளவு குறைத்து அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும்  வெளி மாவட்ட பயணங்களை மேற் கொள்வதன் மூலம்  கொரோணா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் 

அத்தோடு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் சில சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன அந்த சுற்றறிக்கையினை  அனைத்து தரப்பினரும் பின்பற்றுவதன் மூலம் 
யாழ்ப்பாணக் குடாநாட்டினை கொரோணா தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் 

தற்போது முகக் கவசங்கள் மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடியதாகவுள்ளது எனவே பொதுமக்கள் முக கவசங்களை கட்டாயக அணியுங்கள் அவ்வாறு அணிவதன் மூலம் இந்த  தொற்று ஏனையவர்களிலிருந்து தொற்றாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்


எனினும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் விடயத்தில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் பூரண ஆதரவினை வழங்குவார்கள் அதேபோல் பொதுமக்களும் குறித்த விடயங்கள் தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்குமிடத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோணா தொற்றினைகட்டுப்படுத்த முடியும் எனவும்  தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post