நாளைய பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி என்கிறார் யாழ் அரச அதிபர் மகேசன் - Yarl Voice நாளைய பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி என்கிறார் யாழ் அரச அதிபர் மகேசன் - Yarl Voice

நாளைய பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி என்கிறார் யாழ் அரச அதிபர் மகேசன்
நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்

இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


யாழ்ப்பாண மாவட்டத்திலே கொரோனா தோற்று நிலைமை சற்று  கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது ஒருவருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையிலே 28 நபர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளனர் இருந்தபோதிலும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினர் மற்றும்ஏனைய தொடர்புடைய நிறுவனங்களும் இணைந்து செயற்படுத்தி வருகின்றார்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை யாழ்ப்பாணம் 464 குடும்பங்களைச் சேர்ந்த 994 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள் அதிலே 28 பேர் கட்டாய  தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 

இந்த காலம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை  அதே போல க பொ த  உயர்தர பரீட்சை நடைபெறவிருக்கிற நிலைமை காணப்படுகின்றது அந்த வகையிலே பரீட்சைகளை எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


 குறிப்பாக முடக்கப்பட்ட பகுதிகளிலே இருக்கின்றவர்கள் பீதியடைய தேவையில்லை அவர்களுக்குரிய 5ஆண்டு புலமை ப்பரிசில் பரீட்சை நாளை நடைபெற ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன அதே போன்று உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு ரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன 

இந்த நிலையிலே முடக்கப்பட்ட பகுதிகளில் இருப்போர் அந்தந்த பிரதேசங்களில் பரீட்சை எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இதனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார் 

எனவே மாணவர்கள் எந்த விதமான பீதியும் அடையாமல்  சுகாதார வழிகாட்டலின் படி பரீட்சை நிலையங்களுக்கு சென்று தங்களுடைய பரீட்சைகளினைஎழுத முடியும்

 ஆகவே இந்த பரீட்சை  தொடர்பாக மாணவர்கள் எந்த விடயத்திலும் பீதியடையாது பரீட்சையினை  எழுத முடியும் அனலை தீவினை பொறுத்தவரைக்கும் அவர்கள் ஊர்காவற்றுறை பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு இந்த பரீட்சை எழுதக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன   முடக்கப்பட்ட பகுதியில் இருக்கும்  மாணவர்கள் அவதானத்துடன் உரிய நபர்களை தொடர்பு கொண்டு அதாவது கிராம உத்தியோகத்தர்கள் அல்லது பிரதேச செயலாளர் ஆசிரியர்,அதிபரை  தொடர்புகொண்டு தமது பரீட்சையினை  எழுதுவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் 

மேலும் யாழ்மாவட்டத்தில் தற்பொழுது கொரோணா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது இருந்தபோதிலும்  அபாய நிலைமை இருக்கின்றது ஆனால்  மிக அவதானமாக ஒவ்வொருவரும் செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டி இருக்கின்றது 

குறிப்பாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார அமைச்சு இதுதொடர்பான விரிவான வழிகாட்டல்களை சகல தரப்பினருக்கும் அறிவித்திருக்கிறார்கள் இந்த நிலைமையிலே சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி சமூக இடைவெளி பேணி முக கவசம் அணிந்து தமது கருமங்களை ஆற்றினால் போதும் 

மேலும் யாழ் மாவட்டத்திற்கு வந்து தொழில்களில் ஈடுபடுபவர்கள் கட்டுமாண பணி அல்லது பொது வேலைத் திட்டங்களில் ஈடுபடுபவர்கள்  தங்களுடைய விவரங்களை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி ,பொது சுகாதார பரிசோதகர் அல்லது கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலருக்கு தெரிவித்து தம்முடைய விபரத்தை கொடுத்தால் அவர்கள் தேவையெனின் PCR பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன 

தற்போது யாழ் மாவட்டத்தில் பீதியில்லாது சுகாதார நடைமுறைகளைப் பேணி பொதுமக்களை நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் குறிப்பாக வெளியில் போகும் போது  முகக்கவசம் அணிந்து செல்வதும் கட்டாயமானது 

அதேபோல வர்த்தக நிலையங்கள் ஏனைய அரச அலுவலகங்கள் போன்றவற்றில் தங்களுடைய கடமைகளுக்குச் செல்லும் போது  சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் அதேபோல் நிறுவனங்கள் தங்களுடைய சுகாதார வழிகாட்டல்களை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம்


0/Post a Comment/Comments

Previous Post Next Post