பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது - சுமந்திரன் - Yarl Voice பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது - சுமந்திரன் - Yarl Voice

பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது - சுமந்திரன்


ரிசாட் பதியுதீனின் தம்பியின் வழக்கு குறித்தான நீதிமன்ற விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதீவுயுதின் தம்பி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டுமென நுர்ற்றுக்கு மேற்பட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து வைத்துள்ள விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கு எதிராக நாட்சியம் இருந்தால் அதனை விசாரணையாளர்கள் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதே நேரம் அவருக்கு எதிராக சாட்சியம் இல்லை என்றால் அவரை தொடர்ந்து வைத்திருக்க கூடாது. விடுவிக்கப்பட வேண்டும். அதிலும் சட்சியம் இல்லை என்றால் கைது செய்திருக்கவே கூடாது. கைது செய்திருந்துவிட்டு சாட்சியங்களை தேடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது அப்படியாக நடந்ததைப் போல தான் தென்படுகிறது. 

மேலும் கைது செய்து இவ்வளவு நாளும் வைத்திருந்துவிட்டு இப்பொழுது சாட்சியங்கள் இல்லை என்று சொன்னால் சாட்சியங்கள் இல்லாமல் தான் கைது செய்திருக்கின்றனர். ஆகையினாலலே அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாத போது அவர் கைது செய்யப்பட்டிருக்கவோ தடுப்புக் காவலில் வைத்திருக்கவோ கூடாது. 

ஆகவே அந்தந்தத் துறையினர் அந்தத்த வேலைலைச் செய்ய வேண்டுமே தவிர இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக எவரும் கைக் கொள்ளக்கூடாது என்றும் சுமந்திரன் மேலும்  தெரிவித்தார்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post